Saturday, 18 May 2013

Pannavayal Temples


ராமநாதபுரம்  மாவட்டம் திருவாடனை வட்டம் பண்ணவயல் கிராம கோவில்கள் பற்றிய ஒரு பார்வை.

அருள்மிகு. ஸ்ரீ.முத்துமாரியம்மன் கோவில்  

பண்ணவயல்  கிராமத்தின்  மத்தியில் அமைந்துள்ள இக்கோவில் கிராம தேவதை  என அனைவராலும்  வணங்கப்பட்டு வருகிறது.  ஆரம்ப காலத்தில் சிறு மணல் மேடையாக இருந்த இக்கோவில் காலபோக்கில் ஓட்டு  கட்டிடமாக மாற்றப்பட்டு 1992 ஆம் ஆண்டில் தற்போதுள்ள முழுவடிவமாக கிராமமக்களால் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இக்கோவிலை சுற்றிலும் சுவரில் உள்ள ஓவியங்கள் காண்பவர்கள் இதயத்தை கவரும்வண்ணம் உள்ளது.


இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். திருவிழா காலங்களில் காப்பு காட்டுதலுடன் தொடக்கி தினமும் கிராமத்தார்களின் மண்டகபடி பூசை நடைபெறும். திருவிழாவன்று  அம்மனுக்கு அபிசேக ஆராதனையும் இரவு பூக்குழி இறங்குதலும் நடைபெறும். இதில் பக்கதர்கள் காவடி எடுத்தும் தங்கள் வாயில் வேல் குத்தியும் பூவில் இறங்குவது சிறப்பாகும். பெண்கள் தானியங்களை கொண்டு பாரி வளர்த்து அம்மனுக்கு தங்கள் காணிக்கையை செலுத்துவார்கள். 




சிறப்புக்கள்
இங்குள்ள அம்மனை வணங்குவதால் கோடைகாலங்களில் வரும் அம்மை நோய் மற்றும் சரும வியாதிகள் குணமடையும்.  மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து தொட்டில் கட்டுவதன் முலம் புத்திர பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். 

அருள்மிகு. ஸ்ரீ.தர்ம முனீஸ்வரர் ஆலயம் 

திருவடனையிலிருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் அருள்மிகு. ஸ்ரீ.தர்ம முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில்  பண்ணவயல்  கிராமத்தின்  காவல் தெய்வம் ஆகும்.


 
ஆரம்ப காலத்தில் சிறிய மேடையாக இருந்த இக்கோவில் காலபோக்கில் பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்க ஓட்டு  கட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது . வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருவதில் தர்ம முனீஸ்வரர் வல்லவர் . இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். தற்பொழுது பழைய கோவிலுக்குபதிலாக புதிய கோவில்  கட்டும் திருப்பணி நடை பெற்று கொண்டிருக்கிறது.

அருள்மிகு. ஸ்ரீ.கருப்பர்-மறத்தியம்மன்  ஆலயம்

பண்ணவயல் கிராமத்தில் உள்ள மற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஆலயம்           ஸ்ரீ கருப்பர் -மறத்தியம்மன்  கோவில். இக்கோவில் ஊருக்குள்  உள்ளது.




மக்களுக்கு சோதனை வரும் காலங்களில் அவர்களின் வேதனைகளை போக்கும் தெய்வமாக இங்குள்ள மூலவரும் அம்மனும் விளங்குகின்றனர்.



                                                                                                  -முனைவர்.மா.கருணாகரன்.


No comments:

Post a Comment