பண்ணவயல் அருள் மிகு ஸ்ரீ .முத்து மாரியம்மன் கோவில் திருவிழா 2013-ஆம் ஆண்டு மே மதம் 7-ஆம் நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டம் பண்ணவயலில் ஸ்ரீ .முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 67-வது உற்சவ விழா 07.05.2013 அன்று கொண்டாடப்பட்டது. 29.04.2013 அன்று காப்பு காட்டுதலுடன் தொடங்கிய விழாவனது ஒவ்வொரு நாளும் கிராம மக்களின் மண்டகப்படி ஆராதனையுடன் நடைபெற்றது. இவ்விழாவிற்காக கிராம பெண்கள் தானியங்களைக் கொண்டு முளை பாரி வளர்த்தனர்.
திருவிழாவன்று அம்மனுக்கு கிராமத்துடன் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்சி நடைபெற்றது. இதில் எராளமான பக்தர்கள் வேல் குத்தி பூவில் இறங்கினர்.
அதனை தொடர்ந்து பாரியை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரும் நிகழ்சி நடைபெற்றது.
-முனைவர் .மா.கருணாகரன்
No comments:
Post a Comment